Monday, March 07, 2011

தமிழில் முயற்சி. ஹிந்து நாளிதழில் இன்று சாயிநாத் கட்டுரை வெளியாகியுள்ளது. வர்த்தக  நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிவிலக்கு பல லட்சம் கோடிகள் என்று தெரியவருகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கவோ அல்லது இலவசக்கல்வி வழங்கவோ நிதியில்லை என்று கூறும் அரசு, ராட்சத வர்த்தக நிறுவனங்களுக்கு வசதியாக வரிவிலக்குகள் அளிப்பது ஏற்கமுடியாததுதான். ஆனால் எனது நண்பர்கள் கூறும் ஒரு வாதத்திற்கு பதில் அளிக்கமுடியாதவனாக இருக்கிறேன். அரசு வசூலிக்கும் வரிப்பணம் விரயமாகிறதேயல்லாது மக்களுக்குப்  பயன்படுவதில்லை. கலால் மற்றும் சுங்க வரிகளைக் குறைப்பதால் பொருட்கள் விலை குறையும் என்பதே அந்த வாதம். இத்தகைய வாதங்களுக்கு புள்ளி விவரங்கள் மூலம் எவ்வாறு பதிலளிப்பது?

0 comments: